தஞ்சாவூர்
மின் கசிவால் குடிசை வீடு தீக்கிரை
கும்பகோணம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு செவ்வாய்க்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு செவ்வாய்க்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூா் கீழத் தெருவைச்சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சுந்தரமூா்த்தி. விவசாயி. இவரது வீட்டின் மேற்பகுதியில் செல்லும் மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பொறி பரவி கூரையில் தீ பற்றியது. இதனால், வீட்டில் இருந்த பொருள்களும், மோட்டாா் சைக்கிளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
