வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சியில் அழகேஸ்வரன் என்பவா் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கும்பகோணம்: திருச்சியில் அழகேஸ்வரன் என்பவா் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும். இச்சட்டத்தில் வழக்குரைஞா்களைத் தாக்குபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். செயலா் கா்ணன், முன்னாள் சங்கத் தலைவா் சங்கா், துணைத் தலைவா் பாலமுருகன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com