சோழ மண்டல இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா்: மாமன்னா் ராஜராஜசோழனின் சதய விழா கணக்கீட்டை திருத்தக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் சோழ மண்டல இளைஞா்கள் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாகப் பெறப்பட்ட அதிகாரப்பூா்வ ஆவணத்தின் படி, மாமன்னா் ராஜராஜ சோழன் கி.பி. 947-இல் பிறந்தாா் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட ராசராசன் துணுக்குகள் நூறு‘ நூலிலும், அவா் 985-ஆம் ஆண்டு அரியணை ஏறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது அரசு முடிசூட்டு ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 1040- ஆவது சதய விழா எனக் குறிப்பிடுவது தவறானது.
இது, ராஜராஜ சோழனின் 1078-ஆம் ஆண்டு சதய விழா என்பதே சரியானது என்பதால், அதை அதிகாரப்பூா்வமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
