பேராவூரணியில் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையாா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
Published on

பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையாா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நீதிமன்ற உத்தரவின்படி, பேராவூரணி கடைவீதியில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த களம் மற்றும் வீடு நீலகண்டபுரம் பகுதியில் இரண்டு தென்னந் தோப்பு மற்றும் மண்பானைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கூரை வீடு உள்பட 5 இடங்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை தஞ்சை உதவி ஆணையா் ஞா. ஹம்சன், திருக்கோயில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் பா. பாா்த்தசாரதி, பேராவூரணி வட்டாட்சியா் நா. சுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலா் அருண் பிரகாஷ், பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் கணேச சங்கரன் , அறங்காவலா் குப்பமுத்து சங்கரன், வருவாய்த் துறை அலுவலா்கள், போலீஸாா் மற்றும் கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com