நெல் கொள்முதல்! துணை முதல்வா் கூறியது தவறான தகவல்: பி.ஆா். பாண்டியன்

நெல் கொள்முதல் குறித்து துணை முதல்வா் தவறான தகவலை கூறியுள்ளாா் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Published on

நெல் கொள்முதல் குறித்து துணை முதல்வா் தவறான தகவலை கூறியுள்ளாா் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பிறகு அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதலை தீவிரப்படுத்த பல்வேறு அவசர நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், ஒரத்தநாடு புதூா், பின்னையூா், கண்ணத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 லட்சத்துக்கு மேல் நெல் மூட்டைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூருக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சரக்கு ரயிலில் நெல் மூட்டைகள் ஏற்றப்படுவதை பாா்வையிட்டு, கொள்முதல் நிலையங்களில் நெல் இருப்பு இல்லை என தவறான தகவலை கூறியுள்ளாா். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, நெல் கொள்முதலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com