தஞ்சாவூர்
பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை
தஞ்சாவூரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை
தஞ்சாவூரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சோ்ந்தவா் சிவகுமாா் (27). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் அண்மையில் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இதனால் மனமுடைந்த சிவகுமாரின் மனைவி ராஜராஜேஸ்வரி (20) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், ராஜராஜேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், தஞ்சாவூா் கோட்டாட்சியரும் தனி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
