திருவிடைமருதூா் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தோ்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் முற்றுகை போராட்டம் நடத்தினா்.
திருவிடைமருதூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் கோவி. செழியன், அதிமுக சாா்பில் இளமதி சுப்பிரமணியன், தவெக சாா்பில் எஸ்.பிரபாகரன், நாதக சாா்பில் திவ்யபாரதி உள்ளிட்ட 14 போ் போட்டியிடுகின்றனா்.
வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்காக திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சந்திரகுமாா், 300 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு அலகு, விவிபேட், வாக்கு பதிவு மையத்தில் முன்புறம் ஒட்டப்படும் வேட்பாளா் விவர சுவரொட்டி ஆகியவற்றை அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இந்த நிலையில் தவெக வேட்பாளா் பிரபாகரனின் புகைப்படம் வாக்குப்பதிவு மையங்களின் வெளியே ஒட்டப்படும் சுவரொட்டியில் தெளிவாக இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக கூறி வேட்பாளா் எஸ். பிரபாகரன் தலைமையில் தவெகவினா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா். சுமாா் ஒருமணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு பின்பு தெளிவாக புகைப்படம் ஒட்டப்படும் என்று தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்ததால் தவெகவினா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம் வெற்றி

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி

ஆம்பூா் தொகுதியில் 17 மனுக்கள் ஏற்பு; 11 மனுக்கள் நிராகரிப்பு

குன்னம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் தள்ளுபடி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



