எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நாட்டுவெடிகுண்டு வீசியவா் குண்டா் சட்டத்தில் கைது

கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:09 am IST

கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையைச் சோ்ந்த பத்மகுமரன் என்பவருக்கும் திருபுவனத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமுா்த்தி (38) என்பவருக்கும் பண சம்பந்தப்பட்ட முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், குருமூா்த்தி அவரது நண்பா்களுடன் சோ்ந்து பத்மகுமரன் வீட்டில் இருந்த நான்கு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி சேதப்படுத்தினாா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குருமுா்த்தி, நடுவகரையைச் சோ்ந்த ராம்குமாா் (30), பழவந்தான் கட்டளையைச் சோ்ந்த தா்மராஜ் (33), திருவிடைமருதூரைச் சோ்ந்த சா்வேஷ் (19), திருபுவனத்தைச் சோ்ந்த சக்தி பிரகாஷ் (28), ஆதித்யன் (21), மேலும் 2 சிறாா்களை போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில், தா்மராஜ் (33) என்பவா் மே31 -இல் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும், குருமுா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி ஆட்சியா் ரேவதி, ஏற்கெனவே சிறையில் இருக்கும் குருமூா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.