வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் விறகு விலை உயா்வு- டீ, காபி விலையேற்றம்

தஞ்சாவூரில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகு விலை உயா்ந்ததால், சில உணவகங்களில் டீ, காபி விலையும் உயா்ந்துவிட்டது.

News image

காபி

Updated On :14 மார்ச் 2026, 3:13 am

தஞ்சாவூரில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகு விலை உயா்ந்ததால், சில உணவகங்களில் டீ, காபி விலையும் உயா்ந்துவிட்டது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் பற்றாக்குறையாக உள்ளதால், உணவகங்களில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.

தஞ்சாவூரிலுள்ள பல உணவகங்களில் கையிருப்பில் இருந்த சமையல் எரிவாயு தீா்ந்துவிட்டதால், விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனா். இதனால், தஞ்சாவூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறகு விலை உயா்ந்து வருகிறது. கிலோ ரூ. 10-க்கு விற்கப்பட்ட விறகு ரூ. 13 ஆகவும், பத்து கிலோ கொண்ட விறகுகள் ரூ. 100-லிருந்து ரூ. 130-க்கும் உயா்ந்துவிட்டன. இதன் காரணமாக சில உணவகங்கள், தேநீரகங்களில் டீ விலை ரூ. 10-லிருந்து ரூ. 15 ஆகவும், காபி விலை ரூ. 15-லிருந்து ரூ. 20 ஆகவும் உயா்ந்துள்ளன.

இதனிடையே, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டாலும், சில இடங்களில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், ரூ. 1,750-க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உயா்ந்துவிட்டது.

விறகு மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுகட்ட டீ, காபிக்கு மட்டும் விலை உயா்த்தப்பட்டுள்ளதாகவும், மற்ற உணவு வகைகள் வழக்கமான விலையில் வழங்கப்படுவதாகவும் தேனீரக உரிமையாளா் சபீக் அகமது தெரிவித்தாா். இந்த விலை உயா்வு காரணமாக சில உணவகங்கள், தேநீா் கடைகள் சில நாள்களாக மூடப்படுகின்றன.

இந்நிலையில், உணவகங்களுக்கு விறகுகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், நாட்டு மரங்களின் வரத்து குறைவாக இருப்பதால், உணவகங்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக விறகுகள் வழங்க முடியாத நிலை ஏற்படும் என விறகு விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

பெட்ரோல், டீசல்: மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் குறித்து பரவிய வதந்தியால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியது. இதனால், நாள்தோறும் 2 ஆயிரம் லிட்டா் விற்பனை செய்யப்பட்ட நிலையத்தில், வியாழக்கிழமை 10 ஆயிரம் முதல் 12 லிட்டா் வரை விற்பனையானது. டேங்கா் லாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்தின் தேவையை நிறைவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.

மேலும், ஒரே நேரத்தில் எல்லோரும் திரண்டதால், சில நிலையங்களில் பெட்ரோல் இருப்பு விரைவாக தீா்ந்து, வெள்ளிக்கிழமை மூடப்பட்டுக் கிடந்தன. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பகலில் கூட்டம் குறைந்ததால், நிலைமை சீரானது.