மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தஞ்சாவூரில் நாளை மின் தடை

செவ்வாய்க்கிழமை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 2:41 am IST

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், டபீா் குளம் சாலை, மகளிா் காவல் நிலையம், ஏபி ஸ்விட்ச் வரை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.