சுடச்சுட

  

  கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தை திருத்தியமைக்க வலியுறுத்தல்

  By  திருச்சி  |   Published on : 23rd October 2012 02:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை திருத்தியமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
   திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் கருத்தரங்கில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருத்தரங்கில் முன்னாள் எம்பி எம். அப்பாதுரை, மாவட்டச் செயலர் க. சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 20 மாதங்களாகக் கூட்டப்படாமல் உள்ள நல வாரியத்தை உடனடியாகக் கூட்டவும், வாரியத்தை திருத்தியமைக்கவும் வேண்டும். சட்டப்படியான ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். ஆலோசனைக் குழுவின் பரிந்துரை இல்லாமல் அரசே தன்னிச்சையாக வாரிய செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதைக் கைவிட வேண்டும்.
   பதிவு புதுப்பித்தல், கேட்பு மனு அளித்தல் போன்ற பணிகளுக்கு தொழிற்சங்கங்களின் உதவியுடன் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். வாரியத்தில் பதிவுசெய்ய கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற வேண்டும் என்ற அரசாணையை ரத்துசெய்ய வேண்டும். தொழிலாளர் துறை அலுவலகத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai