சுடச்சுட

  

  பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சி ஜங்ஷன் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துக்கு செல்ல தகுந்த சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறை சார்ந்த கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் வழங்கப்படுவதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். நிரந்தர வருமானம் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தித் தர வேண்டும்.
   மாவட்ட நலப் பணிகள் குழுவில் மூவகை மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் என்.டி. மணியன் தலைமை வகித்தார். உபயோகிப்பாளர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் சி.எம். ராஜசேகர் தொடக்கவுரையாற்றினார். குழு செயலர் பி. மாரிக்கண்ணன், துணைத் தலைவர் ஏ.பி. சரவணன் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai