சுடச்சுட

  

  அதிமுக அரசின் பொய் வழக்குகளைக் கண்டு முடங்கவில்லை, கம்பீரமாகவே பணியாற்றி வருகிறோம் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
   திருச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளிலிருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று, அவர் மேலும் பேசியது:
   சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஒரு பணிகளும் நடைபெறவில்லை. இருண்ட தமிழகத்தை காப்பாற்ற தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி வர வேண்டும்.
   மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ளது. அத்தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற வேண்டும். அதற்காக கட்சியினர் தயாராக வேண்டும் என்றார் ஸ்டாலின்.
   நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினிடம், தேமுதிக திமுக பக்கம் சாய்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ஹேசியங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றார், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறித்து கேட்டதற்கு, இதுகுறித்து ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
   திருமண விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, முன்னாள் அமைச்சர்கள், கே.என். நேரு, என். செல்வராஜ், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai