சுடச்சுட

  

  உப்பிலியபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
   புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சத்தியமங்கலம் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் பாலுசாமி (47). ஞாயிற்றுக்கிழமை ஆத்தூரில் நடைபெற்ற மகள் திருமணத்துக்கு பிறகு, வேனில் உறவினர்கள் 15 பேருடன் சொந்த ஊருக்கு பால்சாமி வந்து கொண்டிருந்தார். வேனை க. செல்வக்குமார் (32) ஓட்டினார்.
   உப்பிலியபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையின் குறுக்கே திடீரென வந்தவர் மீது மோதாமல் இருக்க வேனை வலதுபக்கமாக ஓட்டுநர் திருப்பியபோது, வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
   இந்த விபத்தில் வேனில் இருந்த பா. தேவி (35), ம. அஞ்சலை (45), மு. கருப்பாயி (60), கோ. பொன்னுத்துரை (46), விஜயலட்சுமி (27), சுப்பிரமணி (29), அ. கவிதா (27), பா. சாந்தி (27), மா. ரேணுகா (23), ரா. முத்துலட்சுமி (35), வேன் ஓட்டுநர் க. செல்வக்குமார் (32) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
   இவர்களில் தேவி, அஞ்சலை, கருப்பாயி, பொன்னுத்துரை ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai