சுடச்சுட

  

  ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கைது

  By  திருச்சி  |   Published on : 30th October 2012 12:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்குள் தீக்குளிக்க முயன்ற பெண் உள்ளிட்ட இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   திருச்சி வடக்கு காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி தமிழ்ச்செல்வி (50). இவர் தனக்குச் சொந்தமான வீடு, கடை மற்றும் வீட்டுமனைகளை தனது மகன், மகள்கள், மருமகன் ஆகியோர் அபகரித்து கொண்டு விட்டதாகக் கூறி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தாராம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
   திங்கள்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்குக்கு வந்த தமிழ்ச்செல்வி, தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
   பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் தமிழ்ச்செல்வியை கூட்ட அரங்குக்கு வெளியே அழைத்து வந்தனர். இந்த நிகழ்வு குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
   தீக்குளிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவிட்டத்தை தொடர்ந்து, கன்டோன்மென்ட் போலீஸôர் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வியையும், அவர் உடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த நிலத்தரகர் அண்ணாவியையும் போலீஸôர் கைது செய்தனர்.
   இனியும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு விளம்பரங்களைத் தேடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன்.
   துணை ஆணையர் ஆய்வு: பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகரக் காவல் துணை ஆணையர் மு. சத்தியாபிரியா ஆட்சியரகம் வந்து, விசாரணை நடத்தினார்.
   இனி குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனை நடத்திய பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று போலீஸôருக்கு உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai