சுடச்சுட

  

  உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்று டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்

  By  திருச்சி  |   Published on : 30th October 2012 12:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைத்துப் பள்ளி மாணவர்கள் மூலமாக டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் இரண்டாம் கட்ட முயற்சியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உறுதிமொழி படிவம் அளித்து அவர்களிடம் கையெழுத்து பெற்று பணிகளை ஆர்வத்துடன் மேற்கொள்கிறது திருச்சி மாநகராட்சி.
   திருச்சி மாநகரில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகி வருகிறது.
   இந்த நிலையில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி ஆதாரங்களை அகற்றும் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. வீடுகளில், தெருக்களில் உள்ள கொட்டாங்கச்சி, டயர், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவற்றில் மழை நேரத்தில் தேங்கும் தூய தண்ணீரில்தான் இந்த வகைக் கொசுக்கள் முட்டையிட்டு பெருகுவதால் இந்த கொசு ஒழிப்புப் பணியை தொடங்கியது மாநகராட்சி நிர்வாகம்.
   இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநகர் முழுவதும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் மூலம் நடைபெற்ற இந்த முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 4) மீண்டும் மாணவர்களைக் களமிறக்குவதற்காக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆணையர் வே.ப. தண்டபாணி.
   இந்தக் கூட்டம் திங்கள்கிழமை பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு- விழிப்புணர்வு உறுதிமொழிப் படிவம் வழங்கி வீடுகளில் பெற்றோர்களுடன் சேர்ந்து அந்தப் படிவத்தில் கையெழுத்து பெற்று இப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினார் ஆணையர்.
   இந்தக் கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொ) டாக்டர் செந்தில்குமார், டாக்டர் ந. ராஜேசுவரி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai