சுடச்சுட

  

  இந்திய ராணுவ பயிற்சி மையம் மற்றும் துறைமுகங்களின் வரைபடங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியின் (35) காவல் திங்கள்கிழமை நீட்டிப்பு செய்யப்பட்டது.
   திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமீம் அன்சாரிக்கு அண்மையில் 6 நாள்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலை நீட்டிக்க முறைப்படி திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு தமீம் அன்சாரி அழைத்து வரப்பட வேண்டும்.
   ஆனால், பாதுகாப்பு காரணங்கள் கூறி தமீம் அன்சாரியின் விசாரணை விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. நவம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதித் துறை நடுவர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai