சுடச்சுட

  

  துறையூர் அருகே பிறந்து ஒரே நாளே ஆன பெண் சிசு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
   துறையூர் அருகேயுள்ள பச்சமலை தண்ணீர் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி சுதா (25). இவர் 3-வது குழந்தை பிரசவத்துக்காக செங்காட்டுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
   அங்கு அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்தது.
   இந்நிலையில், அந்த பெண் சிசு, திங்கள்கிழமை காலை திடீரென உயிரிழந்ததாக கணேசன், மருத்துவ அலுவலரிடம் கூறினாராம். இதுதொடர்பாக மருத்துவ அலுவலர் மதுசூதனன், துறையூர் போலீஸில் புகார் அளித்தார்.
   பெண் சிசுவின் சடலத்தை போலீஸôர் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai