சுடச்சுட

  

  ராணுவ டாக்டர் கொலை வழக்கு: எதிரிக்கு ஆயுள் சிறை

  By  திருச்சி  |   Published on : 30th October 2012 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கடந்த 2010-ல் ராணுவ டாக்டர் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், எதிரிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
   கடந்த 2010, பிப். 4-ம் தேதி ராணுவ டாக்டர் ரமேஷ் (35) தனது குடும்பத்துடன் திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது மனைவி அனுராதாவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றவர்களை ரமேஷ் பிடிக்க முற்பட்டார்.அப்போது, ரமேஷை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு எதிரிகள் தப்பியோடினர்.
   பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார். இந்த வழக்கில் கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த முருகன் (24) மற்றும் வினோத் ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர். வினோத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி வேல்முருகன் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai