சுடச்சுட

  

  எஸ்.எம்.எஸ்.மூலம் தொலைபேசி பில் தொகையை தெரிவிக்க செல்போன் எண்களை சேகரிக்கும் பணியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  வால்பாறை பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் மூலம் சுமார் 2 ஆயிரம் தொலைபேசி இனைப்புகள்  வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மாதத்திற்கு ஓரு முறை கனக்கிடப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து பில் அனுப்பி வருகின்றனர். இனண்ப்பு பெரும் பொழுது சிலர் சரியான முகவரி கொடுக்காததால், அனுப்பப்படும் பில்கள் சரிவர கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் சில வாடிக்கையாளர்கள் பில் தேதியில் தொகை கட்ட முடியாமல் இனைப்பு துண்டிக்கப்படும் நிலைமைக்கும ஆளாகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சைனையை போக்கும் வகையில் தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து அணைத்து தொலைபேசி எண்களிலும் தொடர்ப்பு கொண்டு தங்களின் செல்போன் நம்பரை சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் பில் தொகை மற்றும் கட்ட வேண்டிய கடைசி தேதி எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai