சுடச்சுட

  

  மழை பெய்யாததால் வால்பாறை அடுத்த சோலையார் அணையின் நீர்மட்டம் 143 அடியாக குறைந்தது.

  வால்பாறை பகுதியில் இந்த வருடம் பருவ மழை மிக குறைவாகவே பெய்துள்ளன. ஓவ்வொரு ஆண்டும் பருவ மழை  இரண்டு மாதம் இடைவிடாது பெய்யும். இதில் சோலையார் அணை மூன்று முறையாவது நிரம்பிவிடும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மழை அளவு குறைந்து காண்பபடுகிறது. இந்த வருடமும் மழை மிக குறைவாக பெய்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி ஓரு வார காலம் இடைவிடாது பெய்த மழைக்கு 160 அடி  கொள்ளளவு கொண்ட சோலையார் அணை நிரம்பியது. இந்நிலையில் தற்போது மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் கனிசமாக குறைந்து தற்போது 143 அடியாக  உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai