சுடச்சுட

  

  ரேஷன் கடை பெண் ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

  By dn  |   Published on : 31st October 2012 04:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வால்பாறை அருகே ரேஷன் கடை பெண் ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  வால்பாறை அடுத்த சின்கோனா எஸ்டேட் ரயான் டிவிசனில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் ரேஷன் கடை செயல்படுகிறது. அந்த கடையில் கடந்த செவ்வாய்கிழமை இலவச வேட்டி சேலை வழங்கியுள்ளனர். அப்போது தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 4 பேர் அந்த கடையின் பெண் ஊழியர் எல்சியிடம் (48) தகராறு செய்து கீழே தள்ளி தாக்கியுள்ளனர். எல்சி கொடுத்த புகாரின் பேரி்ல் வால்பாறை போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள பாலு, விஜயன், சிவா, மோகன் ஆகிய 4 பேர்களை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai