காரைக்கால் மாவட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் உரிமைக்காக போராடும் சங்கம் சார்பில், காரைக்கால் பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியரகம் வரை கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்காலில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதோடு, வீடுகட்ட மானியத் தொகையும் வழங்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான இடங்களை அரசு கையகப்படுத்தி, ஏழை மக்களுக்கு வீடுகட்ட மனைகளாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தங்க தேவதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாரதி, தங்கபிரகாஷ், ஆதிசெல்லையா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.