Enable Javscript for better performance
\\\"கைதிகளுக்கான சட்ட உதவிகள் சட்டப்படியான உரிமைகளே!\\\'- Dinamani

சுடச்சுட

    

    கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் எதுவும் யாசகம் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளே என்றார் மாவட்ட முதன்மை நீதிபதி பெ. வேல்முருகன்.

    திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மத்திய சிறை வளாகத்துக்கு வெளியே புதன்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து இலவச சட்ட உதவி மையத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

    நம் உரிமையைப் பேசும் அதேநேரத்தில் மற்றவர்களின் உரிமைகளுக்குள் தலையிடக் கூடாது என்பதையும் சிறைவாசிகள் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம்.

    கைது குறித்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். விசாரணைக் கைதிகள் அனைவரும் தகுதிவாய்ந்த வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

    அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த சட்ட உதவிகள் அனைத்தும் யாசகம் அல்ல. தீர்ப்பின் நகலை இலவசமாகப் பெறவும், மேல்முறையீட்டுக்குத் தேவையான இலவச சட்ட உதவிகளைப் பெறவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

    சிறைக்கு வெளியே பிணையில் வரும்போது கைதிகளை பொய் வழக்கில் உடனடியாகக் கைது செய்கிறார்கள் என்பதற்காக தற்போது வெளியே சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதை சிறைவாசிகளும், அவர்களின் உறவினர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார் வேல்முருகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai