Enable Javscript for better performance
10-ம் வகுப்பு மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர் புதன்கிழமை அதிகாலை ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி முபாரக் ரைஸ்மில் காலனியைச் சேர்ந்த அன்புச்செல்வம் மகன் சுகுமார் (15). இவர் புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே சுகுமார், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், சுகுமார் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அரியலூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai