Enable Javscript for better performance
இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

    By திருச்சி  |   Published on : 17th April 2015 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் தலைமையிடத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

    திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் தலைமையிடத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.

    தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இரவுக் காவலர் பணிக்கும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் விதவைப் பெண்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35. மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பு 18 முதல் 30.

    இந்தப் பணி வாய்ப்பைப் பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களுடன், கல்விச் சான்று நகலை இணைத்து சுய சான்றொப்பமிட்டு, மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப் பிரிவு (3-வது தளம்), மாவட்ட ஆட்சியரகம், திருச்சி என்ற முகவரிக்கு ஏப். 28-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai