Enable Javscript for better performance
சிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் மழை காரணமாக ஏற்பட்ட சிக்னல் கோளாறுகள் காரணமாக திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக வந்து சென்றன.

    கடந்த 1 வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகின்றது. புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலைய பகுதியில் மழை நீர் தேங்கியது. இதன்காரணமாக சிக்னல்கள் பாதிக்கப்பட்டு சரி வர இயங்கவில்லை. பின்னர் தொழில் நுட்ப வல்லுநர்கள் அவற்றை சரி செய்தனர். எனவே விழுப்புரம், தஞ்சை, திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் தாமதமாக சென்றன.

    சென்னையிலிருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரயில் அதிகாலை 4.20-க்கு திருச்சியை கடந்து செல்ல வேண்டும். இந்த ரயில் காலை 6.30-க்கு கடந்து சென்றது. அதேபோல நெல்லை செல்லும் விரைவு ரயில் அதேபோல அதிகாலை 4 மணிக்கு திருச்சி வரும் மங்களூர் விரைவு ரயில் 6.30-க்கும், 5 மணிக்கு திருச்சியை வந்தடையும் மலைக்கோட்டை விரைவு ரயில் 7.30-க்கும், காலை 7.15-க்கு திருச்சி வந்தடையும் உழவன் விரைவு ரயில் 10 மணிக்கும் திருச்சி வந்து சேர்ந்தன.இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai