Enable Javscript for better performance
திருச்சி மத்திய சிறையில் விவசாயிகள் உண்ணாவிரதம் - Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மத்திய சிறையில் விவசாயிகள் உண்ணாவிரதம்

    By திருச்சி  |   Published on : 17th April 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகள் 15 பேர் திருச்சி மத்திய சிறையினுள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,

    விவசாய பயிர்களை அழிக்கும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், இனாம் கல்பாளையத்தில் 30 பேருக்கு மோசடியாக வீட்டுமனை பட்டா வழங்கியதனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்னு தலைமையில் விவசாயிகள் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர் சேட்டு மற்றும் வாழையூர், சணமங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 150 பேரை மண்ணச்சநல்லூர் போலீஸார் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர். இவர்களில் 15 பேரை ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

    இதையடுத்து பி.அய்யக்கண்ணு உள்ளிட்ட 15 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் எங்களை கைது செய்தது சட்ட விரோதம் என கூறி சிறையினுள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai