Enable Javscript for better performance
வீரமலைப்பாளையத்தில் பொதுமக்கள் நடமாடத் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதையொட்டி, ஏப். 20-ம் தேதி முதல் ஏப். 22-ம் தேதி வரை பொதுமக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அனியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் ஏப். 20-ம் தேதி முதல் ஏப். 22-ம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இப்பயிற்சி நடைபெறும்.

    எனவே, மேற்கண்ட நாள்களில் வீரமலைப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் எனவும், இப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai