Enable Javscript for better performance
திருச்சி கோட்டத்துக்கு ரூ.544.66 கோடி வருவாய் ரயில்வே மேலாளர்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி கோட்டத்துக்கு ரூ.544.66 கோடி வருவாய் ரயில்வே மேலாளர்

    By திருச்சி  |   Published on : 27th January 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் கடந்த 9 மாதங்களில் ரூ.544.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்றார் கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன்.

    திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 66-வது குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்த பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் பேசியது:

    தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் கடந்த 9 மாதங்களில் பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ.197.26 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் பயணிகள் மூலம் கிடைத்த வருவவாய் ரூ.166.70 கோடி. கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில 18.33 சதவிகிதம் கூடுதலாக வருவாய் கிடைத்திருக்கிறது.

    இதுபோல, சரக்குப் போக்குவரத்து மூலமாக கடந்தாண்டில் ரூ.301.23 கோடியாக வருவாய் கிடைத்த நிலையில், நிகழாண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ.300.94 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது.

    பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மூலமாக கடந்த 9 மாதங்களில் திருச்சி கோட்டத்துக்கு கிடைத்த வருவாய் ரூ.544.65 கோடியாகும். கடந்த ஆண்டில்

    இதே காலக்கட்டத்தில் கிடைத்த வருவாய் ரூ.515.57 கோடியாகும். கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் 5.04 சதவிகிதம் கூடுதலாக கிடைத்துள்ளது.

    பயணிகள் ரயிலில் எவ்வித அச்சமுமின்றி செல்ல போதிய பாதுகாப்பு செய்து கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் மஞ்சுளா ரங்கராஜன்.

    நிகழ்வில் ரயில்வே உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai