Enable Javscript for better performance
வயலூர் முருகன் கோயிலில் பிப்.3 -ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வயலூர் முருகன் கோயிலில் பிப்.3 -ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

    By திருச்சி  |   Published on : 27th January 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி குமாரவயலூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிóல் பிப்ரவரி 3-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது.

    தைப்பூசத் தினமான பிப்ரவரி 3-ம் தேதி அதிகாலை 5 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு முத்துக்குமாரசுவாமி புறப்பாடாகி உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளி, அதவத்தூர் மண்டபத்தில் காட்சி தருதல் நடைபெறும்.

    இரவு 8 மணிக்கு புறப்பாடாகும் முத்துக்குமாரசுவாமி வரகாந்திடலை அடைந்து மண்டகப்படி பெற்று, தைப்பூச மண்டபத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடைவார்.

    பிப்ரவரி 4-ம் தேதி வடகாபுத்தூர் கிராமத்திலிருந்து புறப்படும் முத்துக்குமாரசுவாமி 4 ஊர் சுவாமிகளுடன் சேர்ந்து சோமரசம்பேட்டையில் காட்சியளித்து வீதியுலா வருவார்.

    தைப்பூசத்தன்று வயலூர் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் க.கதிரேசன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai