Enable Javscript for better performance
சாலை விபத்து: மதுரை பேராசிரியை, கணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியையும், அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65), அவரது மனைவி சாரதா (50), மகன் ராமசாமி (16) ஆகியோர், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வியாழக்கிழமை பகலில் புறப்பட்டனர். காரை பிரபு (29) என்பவர் ஓட்டினார்.  திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்திலிருந்த இரும்பு தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    இதில் கிருஷ்ணமூர்த்தி, சாரதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமசாமி மற்றும் ஓட்டுநர் பிரபு ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர். விபத்தில் இறந்த கிருஷ்ணமூர்த்தி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் போராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சாரதா மதுரையில் உள்ள மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியாற்றியவர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai