சுடச்சுட

  

  திருச்சியில் மேற்கூரையை உடைத்து 3 கடைகளில் திருட்டு

  By திருச்சி,  |   Published on : 07th August 2016 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி பணிக்கால் தெருவைச் சேர்ந்தவர் பாலசிவம் (45). இவர் புத்தூர் ஹைரோட்டில் சாலை பிள்ளையார் கோயில் அருகே செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அடுத்தடுத்து, ராமலிங்க நகரைச் சேர்ந்த அருண்குமாரின் (40) கணினி பழுதுபார்க்கும் கடையும், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் (59) மிக்ஸி, கிரைண்டர் பழுதுபார்க்கும் கடையும் வரிசையாக உள்ளன.

  இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டிவிட்டுச் சென்றனராம். இதில், பாலசிவம் காலையில் வந்து கடையைத் திறந்து பார்த்தபோது, கடையின் மேற்புறம் ஆஸ்பெஸ்டாஸ் தகடால் அமைக்கப்பட்டிருந்த கூரை உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த 4 செல்லிடப்பேசிகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து, அங்கு வந்த மற்ற இருவரும் கடைகளைத் திறந்து பார்த்த போது, அந்தக் கடைகளின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், பொருள்கள் ஏதும் திருட்டுப்போகவில்லை.

  உறையூர் போலீஸார், கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

  திருட்டு நடந்த இடத்தின் அருகேயுள்ள விறகுக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை திருடவந்த மர்ம நபர் உடைத்துள்ளார். அதில் பதிவான உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai