சுடச்சுட

  

  மலிவான விலையில் மல்லிகைப்பூ:கிலோ ரூ.10-க்கு விற்பனை

  By ஸ்ரீரங்கம்,  |   Published on : 04th June 2016 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மழைக்காரணமாக மல்லிகைப்பூ அதிகமாக வரத்தொடங்கியதால், ஸ்ரீரங்கம் சாத்தாரவீதியில் உள்ள பூ சந்தையில் வெள்ளிக்கிழமை மாலை மல்லிகைப்பூ கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

  அவ்வாறு குறைந்த விலையில் விற்கப்பட்டாலும், வாங்குவார் இல்லாமல் மல்லிகைப்பூ பல இடங்களில் தேங்கிவிட்டது. கடந்த ஒரு வாரமாக மல்லிகைப்பூ பயிரிடும் பகுதியான எட்டரை, கோப்பு, கோசம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் மல்லிகைப்பூ வரத்து அதிகம் இருந்தது. இதனால், கடந்த சில வாரமாக கிலோ 100 ரூபாயிலிருந்து படிப்படியாகக் குறைந்து, வெள்ளிக்கிழமை மாலை கிலோ ரூ. 10-க்கு மல்லிகைப்பூ விற்கத்தொடங்கியது.

  இதுகுறித்து மல்லிகைப்பூ பயிரிடும் விவசாயி சக்திவேல் கூறுகையில், தற்போது விற்கும் விலையால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மல்லிகைப்பூ பறிக்கும் கூலிக்கூட விற்கும் விலைக்கு கட்டிபடியாகாது.

  பாதுகாத்து பயிரிட்டு பறிக்கும் மல்லிகைப்பூ இதே விலையில் தொடர்ந்து விற்றால், நாங்கள் மல்லிகைப்பூவை பறிக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும். மல்லிகைப்பூவை பறித்து அதை எடுத்துவரும் வாகனச் செலவுக்குக்கூட எங்களது கைகாசுதான் செலவாகிறது என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai