சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி: சீமான் பேட்டி

  By திருச்சி  |   Published on : 05th June 2016 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

  திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களிடம் கூறியது:

  2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். இதில் 20 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோல, தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளோம்.

  அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒரு மாதத்துக்கு முன்னர் சின்னம் கிடைத்து, வாக்குக்கு பணம் வழங்காத நிலையிலும், நாம் தமிழர் கட்சிக்கு 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.

  எங்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும்  மதிப்புமிக்கது. லஞ்சம், ஊழலற்ற தூய அரசியலை விரும்புவோர் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இதை ஒரு தொடக்கமாக வைத்து கொண்டு தொடர்ச்சியாக முன்னேறி செல்வோம்.

  ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் (அதிமுக, திமுக) தமிழக அரசியலில் நாணயத்தின் இருபக்கமாக செயல்படுவோம் எனக் கூறியுள்ளதை ஜனநாயக ரீதியில் வரவேற்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் சரிவர செயல்படவில்லை. 100 சதவீத வாக்குப்பதிவுக்கு முன்னுரிமை அளித்த தேர்தல் ஆணையம். அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் வழங்கியதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

  தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசு, வியன்னரசு, திருச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai