சுடச்சுட

  

  காவலாளி கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  By திருச்சி  |   Published on : 09th June 2016 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சியில் காவலாளியை கொலை செய்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

  திருச்சி மாவட்டம் முடுக்குப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பாலசுப்ரமணியன் (58). இவர் திருச்சி ஜங்ஷன் பகுதி ரயில்வே பயிற்சி மையத்துக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்ற கொண்டிருந்த கட்டடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

  இந்த கட்டடத்துக்கு, திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு கோவிந்தபுரம் ஆர்.எம். காலனி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பாண்டியராஜன் (26) மற்றும் திருச்சி பெரிய மிளகுபாறையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் வெந்தகை பாலா என்கிற பாலமுருகன் (30) ஆகிய இருவரும் திருநங்கைகளை அழைத்து வந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

  இவர்களை காவலாளி பாலசுப்ரமணியன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த 2014 செப்டம்பர் 26-ம் தேதி கட்டடத்தில் தனியாக இருந்த காவலாளி பாலசுப்ரமணியனை இரும்பு கம்பியாலும், கட்டையாலும் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து பாண்டியராஜன், பாலா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த பாலா தலைமறைவாகிவிட்டார்.

   இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

  வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, பாண்டியராஜனுக்கு மட்டும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்தார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai