Enable Javscript for better performance
கோயில் திருவிழாவில் குட்டி குடித்த மருளாளி மயங்கி விழுந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோயில் திருவிழாவில் குட்டி குடித்த மருளாளி மயங்கி விழுந்து சாவு

    By திருச்சி  |   Published on : 09th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம் குண்டூர் கோயில் திருவிழாவில் குட்டிக் குடி எனப்படும் ஆட்டைக் கடித்து ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சியில், ஆட்டு ரத்தம் குடித்த மருளாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    திருச்சி அருகே குண்டூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான செல்லாயி அம்மன் பல்லக்குத் திருவிழா புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. மருளாளி மருதை (66), தீபாராதனைக் காட்டி பல்லக்கு திருவீதியுலாவைத் தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பல்லக்கு வீதியுலா வரும் போது ஆங்காங்கே குட்டிக் குடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மருளாளி மருதை, ஆடு ஒன்றின் ரத்தத்தை குடித்த போது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    தகவலறிந்த நவல்பட்டு போலீஸார், மருதையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், மருளாளி மருதை மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதனிடையே சுவாமி பல்லக்கு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இருப்பினும் குட்டிக் குடி நிகழ்ச்சியில் மருளாளி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இறந்த இக்கோயில் பூசாரி மருதை குண்டூர் ஊருணிக்கரை பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகன், மகள்களுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai