சுடச்சுட

    

    நடைப்பயிற்சி சென்ற ஏடிஎஸ்பி மனைவியிடம் நகைப் பறிப்பு

    By திருச்சி  |   Published on : 09th June 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற ஏடிஎஸ்பி மனைவியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

    திருச்சி பீமநகர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் புதுக்கோட்டையில் ஏடிஎஸ்பியாக உள்ளார். இவரது மனைவி சாந்தி (45) மன்னார்புரம் மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர் வழக்கம் போல், புதன்கிழமை காலை திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது இவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவன், சாந்தியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 6.5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட சாந்தி அந்த நகையின் ஒரு பாதியை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் மர்ம நபர் சங்கிலியின் ஒரு பகுதியை

    (5 பவுன்) பறித்துக் கொண்டு, மற்றொரு மர்ம நபர் தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றாராம். சாந்தி போராடியதால் ஒன்றரை பவுன் எடையுள்ள நகை தப்பியது.

    இதுகுறித்து சாந்தி அளித்தப் புகாரின் பேரில், நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிந்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai