சுடச்சுட

  

  சுவர் இடிந்து தொழிலாளி சாவு: பொக்லைன் ஓட்டுநர் கைது; ஒப்பந்ததாரர் மீது வழக்கு

  By திருச்சி  |   Published on : 15th June 2016 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொக்லைன் ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பாலக்கரை இருதயபுரம் பகுதியில் நடைபெற்ற வாய்க்கால் தூர்வாரும் பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

  பணியில் திங்கள்கிழமை அங்குள்ள வீட்டின் அருகில் குழி பறித்தபோது, வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தண்டபாணி (38) சிக்கிக் கொண்டார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர், தண்டபாணியின் சடலத்தை மீட்டனர். எஞ்சிய தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

  இதுகுறித்து பாலக்கரை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் குழிதோண்டும் போது அருகில் இல்லாத தனியார் ஒப்பந்ததாரர் மீதும், அஜாக்கிரதையாக பணியில் ஈடுபட்டதாக பொக்லைன் ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிந்து, பொக்லைன் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் செம்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியை (24) செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai