சுடச்சுட

  

  விபத்தில் மூளைச்சாவு: விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்: இருதயம் விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டது

  By திருச்சி  |   Published on : 18th June 2016 03:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள காட்டுமன்னார்கோவில் வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் பெரியநாகசாமி (50). இவரது மனைவி எலிசபெத்ராணி. இத்தம்பதிக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

  கடந்த 14-ம் தேதி ஊருக்கு அருகே சாலை விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்த பெரியநாகசாமி, தீவிர சிகிச்சைக்காக திருச்சி புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு புதன்கிழமை (ஜூன் 15) மூளைச்சாவு ஏற்பட்டது.

  இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

  திருச்சி கோட்டை பகுதியில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனையில் வியாழக்கிழமை உடல் உறுப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் தானம் பெறப்பட்டன. அவரது இருதயம், வால்வுகள், நுரையீரல் ஆகியவை சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கும், இரு சிறுநீரகங்களும் திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டன.

  முன்னதாக, திருச்சியிலிருந்து விமானம் மூலம் இருதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையம் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸார் செய்திருந்தனர்.

  இதுகுறித்து எலிசபெத்ராணி கூறும்போது, எனது கணவர் உயிருடன் இல்லையென்றாலும் அவர் 6 பேர் உயிர் பிழைக்க உதவியுள்ளார். மேலும், அவர்களின் உடல்களில் உயிர் வாழ்கிறார். அதுவே எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai