சுடச்சுட

  

  ஜூன் 25, 26-ல் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

  By திருச்சி,  |   Published on : 19th June 2016 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்றக் கழகம், பெல் மனமகிழ் மன்றம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான போட்டி ஜூன் 25, 26 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.

  இதுகுறித்து திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பி. பொன்னுபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்றக் கழகம், பெல் மனமகிழ் மன்றம் இணைந்து நடத்தும் முதலாவது மாவட்ட அளவிலான போட்டி பெல் மனமகிழ் மன்ற உள்ளரங்கில் வரும் ஜூன் 25,26 ஆகிய இருநாள்கள் நடைபெற உள்ளது.

  போட்டிகள் ஜூனியர், சப் - ஜூனியர், இளைஞர், ஆண்கள், பெண்கள், இரட்டையர், ஒற்றையர், கேடட், மினிகேடட் போன்ற பிரிவுகளில் நடத்தப்படும். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு அமைப்புகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் வரும் 24-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட செயலர் ஏ. ஜெயக்கண்ணன் - 93456 54878 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai