சுடச்சுட

    

    தில்லைநகர், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 21-ல் குடிநீர் விநியோகம் ரத்து

    By திருச்சி,  |   Published on : 19th June 2016 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்தடை காரணமாக தில்லைநகர், மரக்கடை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் வரும் 21-ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் என்.எஸ். பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்ட நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் நடைபெறும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கன்டோன்மென்ட் ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம், காஜாமலை காலனி, ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ் நகர், ஜெய நகர், பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளில் 21-ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai