சுடச்சுட

    

    பெல் நிறுவன பற்றிணைப்பு ஆராய்ச்சி கழகத்துக்கு விருது

    By திருச்சி  |   Published on : 19th June 2016 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுமையான தொழில்நுட்ப மேம்பாட்டு முனைப்புகளுக்காக திருச்சி பெல் நிறுவனத்தின் பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகத்திற்கு (டபிள்யூஆர்ஐ) ஸ்கோச் பிஎஸ்இ விருது வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசால் 1975-ஆம் ஆண்டு பெல் நிறுவனத்தில் ஐக்கிய நாடுகள் தொழிலக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஐக்கியநாடுகள் மேம்பாடு இயக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு பற்றிணைப்பு செய்முறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், உலோகவியல் ஆய்வுகள் மற்றும் பற்றிணைப்பு அறிவுப் பரிமாற்றம், ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

    உற்பத்தி ஆலைகளின் தரத்தையும், உற்பத்தித் திறனையும் பெருக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்ப முனைப்புகளை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஸ்கோச் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    மும்பையில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் புதுமையான தொழில்நுட்ப மேம்பாட்டு முனைப்புகளுக்காக திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஸ்கோச் பிஎஸ்இ விருது வழங்கப்பட்டது. விருதை "செபி' இயக்குநர் ராஜீவ் குமாரிடமிருந்து திருச்சி பெல் நிறுவனத்தின் பொதுமேலாளர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) பி. ரகுராமன், பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழக ஆய்வகங்களின் பொதுமேலாளர் ஆர். ஈஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai