சுடச்சுட

  

  திருச்சியில் பொதுமக்கள், மாணவர்களை கவர்ந்த நாணயவியல் கண்காட்சி

  By திருச்சி  |   Published on : 25th June 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி தில்லைநகரில் தேசிய அளவிலான பணத்தாள்கள் மற்றும்  நாணயவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவ, மாணவிகள் இதை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

  திருச்சி ஹாபி சென்டர் சார்பில், தில்லைநகரில் மூன்று நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.

  பெங்கால், மும்பை, மெட்ராஸ் மாகாணங்கள் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள், பெங்கால், கொல்கத்தா யூனியன் வர்த்தக வங்கி பணத்தாள்கள், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் காலத்திலும், பிரசிடென்சி பணத்தாள்கள், குடியரசுக்குப் பிறகு பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 முதல் ரூ. 1000 வரையிலான பணத்தாள்கள், வரலாற்றுப் பதிவுகள், பிறந்தநாளைத் தாங்கி வந்துள்ள எண்கள், கிழிந்த, பிழையுடன் வந்த பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை 210 நாடுகளின் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பணத்தாள்கள், 220 நாடுகளின் நாணயங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. சங்க கால முத்திரைக் காசுகள், சோழர், பாண்டியர், ரோமானியர், பல்லவர், பிற்காழச் சோழர் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் வெளியான காசுகள், 1835 முதல் 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தாவில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் அச்சிட்டு வெளியான அரை அணா, 2 அணா, 4 அணா, 8 அணா, கால் ரூபாய் மதிப்பில் பல்வேறு வடிவங்களில் உள்ள காசுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

  குடியரசு இந்தியாவில் 1950 முதல் 2015 வரை வெளியிடப்பட்ட காசுகள், வெளிநாடுகளிலிருந்து வெளியான நாணயங்களும் இதில் உள்ளன. பத்தாவது ஆசிய விளையாட்டு, 8-வது உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை பெரியகோயில் ஆயிரமாண்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai