Enable Javscript for better performance
தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கனிமொழி- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கனிமொழி

    By dn  |   Published on : 15th May 2016 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kanimozhi

    தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.

    திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

    பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதை பிரசாரத்தில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

    தொழில்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. விவசாயத் தொழில் அழிந்துவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமெனில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    மூன்று முறை தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய அதிமுகவால் எப்படி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தர முடியும்.

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் யார் மதுபான ஆலையை நடத்தினாலும், அவை உடனடியாக மூடப்படும்.

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிக்க அதிமுகவினர் பணம் கொடுத்தாலும், மக்கள் திமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார் கனிமொழி.

    பேட்டியின்போது, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai