Enable Javscript for better performance
ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.31 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ. 31 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருச்சி காட்டூர் காவேரிநகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (60). கட்டட ஒப்பந்ததாரரான இவர் தனக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்பனை செய்தார். இதன்மூலம் கிடைத்த ரூ. 31 லட்சத்தை தனது வீட்டு அலமாரியில் வைத்திருந்தார்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை காட்டூர் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரது வீட்டுக் கதவுகள் உடைக்கப்பட்டு, அலமாரியின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், உள்ளேயிருந்த ரொக்கம் ரூ. 31 லட்சம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து ஆரோக்கியதாஸ் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
    போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai