Enable Javscript for better performance
"கலை, கலாசார, பாரம்பரிய பெருமைகளை காப்பவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "கலை, கலாசார, பாரம்பரிய பெருமைகளை காப்பவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்

    By DIN  |   Published on : 08th October 2016 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலை, கலாசார, பாரம்பரிய பெருமைகளைக் காப்பவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும் என்றார் மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆ.மயில்வாகனன்.
    திருச்சி தேசியக் கல்லூரியில் தென் மண்டல நாட்டு நலப்பணித் திட்ட குடியரசு தினவிழா முன் அணிவகுப்பு முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, முகாம் கையேட்டை வெளியிட்டு அவர் பேசியது:
    இந்த முகாமில் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, அந்தமான் - நிகோபார், லட்சத் தீவுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்றுள்ளீர்கள். மாணவர்களாகிய நீங்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கென்று கலை, கலாசார, பாரம்பரியம் உண்டு. இவற்றின் அவசியத்தை உணர்ந்து அவற்றை காப்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.
    குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தென் மண்டல அளவில் 42 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அந்த வாய்ப்பை பெற அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார் மயில்வாகனன்.
    முகாம் கையேட்டை பெற்றுக்கொண்டு கல்லூரிச் செயலர் கே.ரகுநாதன் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சி. சாமுவேல் செல்லையா, தமிழ்நாடு மாநில என்.எஸ்.எஸ். அலுவலர் எஸ். ராஜசேககரன், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா, தொழிலதிபர் ரவி முருகையா உள்ளிட்டோர் பேசினர்.
    இம்மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் அணிவகுப்புத் திறன், உடல்நிலை, நேர்காணல், கலைப் பண்பாட்டுத் திறன் ஆகியவற்றின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். முடிவில் தேர்வு செய்யப்படும் 42 பேர் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai