Enable Javscript for better performance
சுமை தூக்கும் தொழிலாளி அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வியாழக்கிழமை இரவு சுமை தூக்கும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    சமயபுரம் அருகேயுள்ள இருங்களூர் சோழமொழி நகரைச் சேர்ந்தவர் பெ. போஸ் (60).  இவர் அதே பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  
    வியாழக்கிழமை இரவு போஸ் தனது வீட்டில் உள்ள ஓர் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மகன், மருமகள், மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்த்தபோது போஸை காணவில்லையாம்.
    இந்நிலையில், வாணிபக் கழக கிட்டங்கியின் பின்புறம் உள்ள மூக்கன் என்பவரது நிலத்தில் போஸ் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது முகம், தலையில் தடியால் தாக்கப்பட்ட காயங்களும், கைகளிலும் காயங்கள் இருந்தன.   சமயபுரம் போலீஸார் போஸின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai