Enable Javscript for better performance
திருச்சியில் இன்று காங்கிரஸார் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சியில் சனிக்கிழமை (அக்.15) காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து கட்சியின் மாவட்டத் தலைவர்கள் திருச்சி மாநகர் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், தெற்கு ஆர்.சி. பாபு, வடக்கு ஜயப்பிரகாஷ் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
    காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள்  திரளாக பங்கேற்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai