Enable Javscript for better performance
பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை: பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை: பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பில் தொடர விருப்பமில்லை என தற்போதைய பதிவாளர் சி. திருச்செல்வம் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும், இதை ஆட்சிமன்றக் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
    புதுக்கோட்டை மாமன்னர் அரசுக் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் சி. திருச்செல்வம். இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (அக்.14) நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஒவ்வொரு தீர்மானம் வாசிக்கப்பட்டு, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றாக, தற்போதைய பதிவாளர் திருச்செல்வத்துக்கு மேலும் ஓராண்டு காலம் பதவி நீடிப்பு அளிப்பது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    அப்போது குறுக்கிட்ட பதிவாளர் திருச்செல்வம், தான் பதவியைத் தொடர விரும்பவில்லை என்றும், தன்னை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரி, அதற்கான கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தீர்மானம் குறித்து விவாதிக்க விரும்பவில்லை என ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai